உள்ளூர் செய்திகள்
அரிமளம் அருகே கோவில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
அரிமளம் அருகே கோவில் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி வருகின்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மருதம்பட்டியில் மருதுடைய அய்யனார் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் கோவில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கு வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பித்தளை பாத்திரங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் டிரஸ்டி ராமசாமி கொடுத்த புகாரின்பேரில் அரிமளம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.