உள்ளூர் செய்திகள்
தக்காளி விற்பனை

கோயம்பேட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை

Published On 2021-12-18 07:32 IST   |   Update On 2021-12-18 07:32:00 IST
உச்சத்தில் இருந்த மற்ற காய்கறி விலையும் ஓரளவு குறையத் தொடங்கி இருக்கிறது. பல்லாரி மற்றும் சாம்பார் வெங்காயத்தின் விலை சத்தம் இல்லாமல் உயர்ந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை :

தக்காளி விலை யாரும் எதிர்பாராத வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தில் இருந்தது. அதனைத்தொடர்ந்து வரத்து கொஞ்சம் அதிகரித்ததன் காரணமாக விலை சற்று குறைந்தது. ஆனால் பெரிய அளவில் விலை குறையாமல் ஒரு கிலோ ரூ.90 வரை விற்பனை ஆனது. பின்னர் கடந்த வாரத்தில் அதன் விலை மேலும் குறைந்து, ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தக்காளி விலை நேற்று கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்து இருக்கிறது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை ஆனது. இனி வரக்கூடிய நாட்களிலும் வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் விலை இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. இதேபோல், உச்சத்தில் இருந்த மற்ற காய்கறி விலையும் ஓரளவு குறையத் தொடங்கி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க பல்லாரி மற்றும் சாம்பார் வெங்காயத்தின் விலை சத்தம் இல்லாமல் உயர்ந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News