உள்ளூர் செய்திகள்
பாலூர் ரெயில் நிலையம்

செங்கல்பட்டு பாலூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் மறியல் -தாமதமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

Published On 2021-12-17 22:17 IST   |   Update On 2021-12-17 22:28:00 IST
பொதுமக்கள் திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு:

சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையிலான ரெயில்கள் தினமும் காலதாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் பயணிகள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு பாலூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் இன்று இரவு திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் மறியல் காரணமாக, அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 

போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் ரெயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

Similar News