உள்ளூர் செய்திகள்
பிடிபட்ட ஆமை

அறந்தாங்கி அருகே அரிய வகை ஆமை பிடிபட்டது

Published On 2021-12-17 16:12 IST   |   Update On 2021-12-17 16:12:00 IST
ஆந்திரா வனப்பகுதிகளில் அதிகம் காணப்படும் 13 நட்சத்திரங்களை கொண்ட ஆமை, தமிழகத்தில் நீர் நிலைகள் அல்லாது, தரை பகுதிகளில் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பருத்தினி கிராமத்தில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று பிடிபட்டுள்ளது. 13 நட்சத்திரங்களை கொண்ட ஆமை பஞ்சாத்தி கிராம மக்கள் செல்லும் வழியில் ஊர்ந்து சென்றபோது பிடிபட்டுள்ளது.

ஆந்திரா வனப்பகுதிகளில் அதிகம் காணப்படும் இவ்வகையான ஆமை, தமிழகத்தில் நீர் நிலைகள் அல்லாது, தரை பகுதிகளில் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. அவ்வாறு பருத்தினி வயல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட நட்சத்திர ஆமை, அறந்தாங்கி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

வனச்சரக அலுவலர் சதாசிவம், வனவர் அன்புமணி, வேட்டைத் தடுப்புக் காவலர் சைமன் ஆகியோர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்ட ஆமையானது, வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதிகளில் பாதுகாப்பாக விடப்பட்டது.

Similar News