உள்ளூர் செய்திகள்
தற்கொலை

திருவையாறு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-12-17 10:18 GMT
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:

திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை புதுத்தெருவைச் சேர்ந்த மோகன் மகன் தினேஷ்வரன் (வயது 19). கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் சண்டை போட்டு வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தினேஷ்வரன் வீட்டுக் கொட்டகையில் தூக்கு மாட்டிக்கொண்டார். அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தினேஷ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின் பேரில் மரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News