உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

குப்பிச்சிபாளையம்-அவிநாசிபாளையத்தில் மதுக்கடையை அகற்ற கோரிக்கை

Published On 2021-12-17 07:36 GMT   |   Update On 2021-12-17 07:36 GMT
பொங்கலூர் மற்றும் கொடுவாயில் குப்பை கொட்ட இடம் இல்லை. இதனால், பல இடங்களில் குப்பை கொட்டி கிடக்கிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் குமார் தலைமையில் நடந்தது.

வட்டார வளர்ச்சி அலுவலர்  தமிழ் செல்வி வரவேற்றார். உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன், துணை தலைவி அபிராமி முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது உட்பட 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜோதிபாசு (இந்திய கம்யூனிஸ்டு ): தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசி பாளையத்தில் மும்முனை மின்சாரம் வழங்கியதை இருமுனை மின்சாரமாக மாற்றப்பட்டுள்ளது. பகலில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. 

வேலம்பட்டி குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். 

குப்பிச்சிபாளையம் மற்றும் அவிநாசிபாளையத்தில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்.

தலைவர் குமார்:மின் சப்ளை தொடர்பாக அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

மதுக்கடையை விரைவில் மூடிவிடுவார்கள். எஸ்.பி.டபிள்யூ., நம்பர் இல்லாமல் அங்கீகாரம் வழங்கப்படுவது இல்லை. முறையாக விண்ணப்பம் கொடுத்து நகர் ஊரமைப்புத் துறையில் நம்பர் வாங்கி கொடுத்தால் விண்ணப்பம் தாமதம் ஆகாது.

பாலகிருஷ்ணன் (தி.மு.க.,):பொங்கலூர் மற்றும் கொடுவாயில் குப்பை கொட்ட இடம் இல்லை. இதனால், பல இடங்களில் குப்பை கொட்டி கிடக்கிறது. 

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சுப்ரமணியம் (தி.மு.க.,):பொல்லிகாளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் தொட்டி கட்ட வேண்டும்; பஸ் நிறுத்தத்தில் உயர் மின் கோபுரம் மின் விளக்கு வேண்டும்.

துளசிமணி (தி.மு.க.,):கருணைபாளையம்- - ஓலப்பாளையம் ரோடு, தாயம்பாளையம்- செம்மாண்டம்பாளையம்சாலை , பெரியாரியபட்டி - கந்தாம்பாளையம் சாலையை புதுப்பிக்க வேண்டும்.

தலைவர் குமார்:ஊராட்சி ஒன்றிய நிதி மூலம் சாலை போட முடியாது. நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்து விடலாம். 

இவ்வாறு விவாதம் நடந்தது. 
Tags:    

Similar News