உள்ளூர் செய்திகள்
மலைப்பாம்பு

நீர்பழனியில் மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய மலைப்பாம்பு

Published On 2021-12-14 17:32 IST   |   Update On 2021-12-14 17:32:00 IST
நீர்பழனி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பை வேடிக்கை பார்த்தனர்.
ஆவூர்:

விராலிமலை தாலுகா, நீர்பழனியில் உள்ள பெரியகுளம் சமீபத்தில் பெய்த பருவ மழையால் நிரம்பி அதன் உபரி நீர் கலிங்கி வழியாக வெளியேறி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் தூண்டில் மற்றும் வலைகளை கொண்டு குளத்தின் ஓரப்பகுதியிலும் கலிங்கியில் இருந்து வெளியேறும் தண்ணீரிலும் மீன்பிடித்து வருகின்றனர். அந்தவகையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் குளத்தில் மீன்பிடி வலை ஒன்றை விரித்து கட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை அவர் மீனுக்கு விரித்திருந்த வலையை வெளியே இழுத்த போது அதில் மீன்களுடன் பெரிய அளவிலான மலைப்பாம்பு ஒன்றும் சிக்கியிருந்தது. இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து நீர்பழனி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பை வேடிக்கை பார்த்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வலையில் சிக்கிய மலைப்பாம்பை மீட்டு நார்த்தாமலை லிங்கமலை காட்டுப்பகுதியில் விட்டனர்.

Similar News