உள்ளூர் செய்திகள்
ஜிகே வாசன்

நரிக்குறவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2021-12-14 14:18 IST   |   Update On 2021-12-14 14:18:00 IST
நரிக்குறவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. மேல்சபையில் பேசியதாவது:-

நரிக்குறவர் சமூகமானது நமது நாட்டின் பிற பகுதிகளில் உள்ள தென்னிந்திய மாநிலங்களில் குடியேறியுள்ளது. நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் குடியேறிய இந்த சமூகத்தினர் பட்டியலின பழங்குடியினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நரிக்குறவர்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படவில்லை. முந்தைய ஆட்சி காலத்தில் முயற்சிகள் எடுத்தும் வழங்கப்படவில்லை. மாநில மற்றும் தேசிய கட்சிகள் இடையே இவர்களுக்கு இந்த அந்தஸ்து அளிப்பதில் ஒத்த கருத்து நிலவி வருகிறது.

இதனை அடுத்து 15 மற்றும் 16-வது மக்களவை காலகட்டங்களில் இவர்களை இந்த பட்டியல் இனத்தில் சேர்ப்பதற்கு இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. எனவே பழங்குடியினர் இனத்திற்கான அமைச்சர் இந்த நரிக்குறவர் சமூகத்திற்கு பட்டியல் இன அந்தஸ்தை உடனடியாக வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News