உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பள்ளிகளில் ஆசிரியர்களாக பெண்கள் நியமனம் - போலீசார் அறிவுறுத்தல்

Update: 2021-12-14 04:42 GMT
பள்ளிகளில் எந்த பிரிவாக இருந்தாலும் வகுப்பு ஆசிரியர்களாக பெண்களை நியமிக்க வேண்டும்.
உடுமலை

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில் வழக்கமான அறிவுறுத்தல் இல்லாமல் சில நடைமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி பெண்கள் மற்றும் இருபாலர் பயிலும் பள்ளிகளில் எந்த பிரிவாக இருந்தாலும் வகுப்பு ஆசிரியர்களாக பெண்களை நியமிக்க வேண்டும். என்.எஸ்.எஸ்., ஜூனியர் ரெட் கிராஸ், ஸ்கவுட் பிரிவுகளுக்கும் பெண்கள் பொறுப்பு வகிக்க வேண்டும்.

எந்தவொரு புகாராக இருந்தாலும், பள்ளிகள் வாயிலாக எளிதாக போலீசாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுகிறது. இதையடுத்து பல பள்ளிகளில் அதற்கான மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
Tags:    

Similar News