உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஜனவரி மாதம் முதல் இதுவரை 13 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- கலெக்டர் தகவல்

Published On 2021-12-13 16:08 IST   |   Update On 2021-12-13 16:08:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 13 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்து உள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் மூலம் 14-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 14 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 13 முகாம்கள் மூலம் 3 லட்சத்து 96 ஆயிரத்து 547 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 14 ஆயிரத்து 517 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 8 லட்சத்து 7 ஆயிரத்து 897 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசிகள் 5 லட்சத்து 6 ஆயிரத்து 620 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கோவிஷீல்டு 1 லட்சத்து 38 ஆயிரமும், கோவாக்சின் தடுப்பூசி 31 ஆயிரமும் கையிருப்பில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது துணை இயக்குனர் (பொதுசுகாதாரத்துறை), ராம்கணேஷ், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் நீலமேகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News