உள்ளூர் செய்திகள்
மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

போலீஸ் விசாரணையில் வாலிபர் மரணம்-உரிய விசாரணை நடத்த இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

Published On 2021-12-13 14:42 IST   |   Update On 2021-12-13 14:42:00 IST
முதுகுளத்தூரை சேர்ந்த வாலிபர் மணிகண்டன் போலீஸ் விசாரணையின் போது இறந்துள்ளார்.
திருப்பூர்:

இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர்  மணிகண்டன் தலைமையில்நிர்வாகிகள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 

அதில் கூறியிருப்பதாவது:-

முதுகுளத்தூரை சேர்ந்த வாலிபர் மணிகண்டன் போலீஸ் விசாரணையின் போது இறந்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். 

சமூக வலைதளங்களில் தவறான கருத்தை பதிவிட்டதாக மாரிதாசை கைது செய்துள்ளனர். அவரை கைது செய்த பிறகே என்ன வழக்கு போட வேண்டுமென்று போலீசார் முடிவுசெய்துள்ளனர். 

மாரிதாஸ் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை வேண்டுமென்றே பழி வாங்குவதற்காக கைது செய்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளனர்.  

Similar News