உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்

Published On 2021-12-12 14:21 IST   |   Update On 2021-12-12 14:21:00 IST
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 950 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை அளித்துள்ளது.
திருப்பூர்:

கோர்ட்டு உத்தரவுப்படி கொரோனாவில் பலியானவர் குடும்பங்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுமென, தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தோரின் இறப்புசான்று, வாரிசு சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டு, கொரோனாவில் பலியானதற்கான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கின்றனர். '

இதுவரை விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். ‘ஆன்லைன்’ பதிவுக்கு பிறகு, விண்ணப்பங்களின் விவரம் சரிபார்க்கப்பட்டு வாரிசுதாரர் சமர்ப்பித்த வங்கி கணக்கில்ரூ. 50 ஆயிரம் விடுவிக்கும் பணியும் தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 950 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை அளித்துள்ளது. இத்துடன் வெளியூரில் இறந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. 

அவர்கள் நீங்கலாக மற்ற வாரிசுதாரருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுதாரர் இருந்தால், அவர்களில் ஒருவர் பெயரில் உள்ள வங்கிக்கணக்கில் தொகையை விடுவிக்க, மற்றவர்கள் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். மாவட்டத்தில் தினமும் 120 பேருக்கு நிவாரணம் விடுவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 352 பேருக்கு நிவாரணம் விடுவிக்கப்பட்டுள்ளது.

 இவ்வாறு அவர்கள் கூறினர். 

Similar News