உள்ளூர் செய்திகள்
நாமகிரிப்பேட்டை அருகே குட்கா விற்றவர் கைது
நாமகிரிப்பேட்டை அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). இவருடைய கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஆயில்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.