உள்ளூர் செய்திகள்
காளை மாடு முட்டி மூதாட்டி பலி

தேவகோட்டையில் காளை மாடு முட்டி மூதாட்டி பலி - 2 பேர் கவலைக்கிடம்

Published On 2021-12-10 14:44 IST   |   Update On 2021-12-10 14:44:00 IST
தேவகோட்டையில் காளை மாடு முட்டி மூதாட்டி பலியான நிலையில் மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

தேவகோட்டை:

தேவகோட்டை கைலாசநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மனைவி மாரியம்மாள் (வயது 70). தனது வீட்டு அருகே நின்றிருந்த போது காளை மாடு குத்தியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அந்தப்பகுதியைச் சேர்ந்த பாக்கியம் (65), தேனாம்பால் (68) ஆகிய 2 பேரையும் அதே காளை மாடு குத்தியதில் படுகாயமடைந்தனர். இவர்கள் மேல் சிகிச்சைக் காக சிவகங்கை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.

இதனை அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் காவலர்களுடன் அப்பகுதி மக்கள் துணையுடன் அந்த காளையை பிடித்து கயிற்றால் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கட்டி வைத்தனர். இதனால் அந்தப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Similar News