உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் கூடுதல் கவனம் - நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

Published On 2021-12-10 13:27 IST   |   Update On 2021-12-10 13:27:00 IST
பெரும்பாலும், கவனக்குறைவு, அதிவேகத்தால் தான் விபத்து நேரிடுகிறது.
அவிநாசி:

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட இடங்களில் சாலை விபத்துகள் அதிகளவில் நேரிடுகின்றன. இதனால் பல நேரங்களில் உயிரிழப்பு நேரிடுகிறது. 

இந்தநிலையில் ‘தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன்’ தலைவர் காதர்பாட்ஷா, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோர் உள்ளிட்டோர் வட்டார போக்குவரத்து அலுவலரின் கவனத்துக்கு சில யோசனைகளை முன்வைத்தனர்.

அதன்படி  ‘பெரும்பாலும், கவனக்குறைவு, அதிவேகத்தால் தான் விபத்து நேரிடுகிறது. சாலை விபத்துகளை குறைக்கவும், சாலை விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வை தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து மேற்கொள்வது தொடர்பான திட்டமிடலை வகுக்க வேண்டும் என கூறினர்.

அவ்வகையில் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ள சாலை பாதுகாப்பு வார விழாவில் விபத்துகளை குறைப்பதற்கான திட்டமிடல், விழிப்புணர்வை தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து மேற்கொள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என நுகர்வோர் அமைப்பினர் தெரிவித்தனர்.

Similar News