உள்ளூர் செய்திகள்
ஆசை, கோபம் மனித வாழ்க்கைக்கு நஞ்சாக உள்ளது - ஆன்மிக சொற்பொழிவாளர் பேச்சு
நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருப்பவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் காலேஜ் ரோடு ஸ்ரீ அய்யப்பன் கோவில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. நிகழ்ச்சியில், ‘எது தவம்‘ எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசினார்.
அவர் பேசியதாவது:
அக்காலத்தில் முனிவர்கள் காட்டில் தவம் செய்து, இறையருள் பெற்றனர். இந்த காலத்தில் காட்டில் போய் தவம் செய்ய முடியுமா? தவம் செய்தால் தான் இறைவன் அருள் கிட்டுமா என்றால் அது இயலாத காரியம். இறையருள் பெற, தவம் செய்யாமல், புண்ணியம் கிடைக்குமா என கேட்டால், நிச்சயம் கிடைக்கும்.
நாம் வீட்டில் இருந்தவரே செய்யும் நற்காரியங்கள் தவத்துக்கு உரிய பலனை தரும். பயணிக்கும் வழியில் நம்மால் இயன்ற நல்லவற்றை செய்ய வேண்டும். பசு மாடுகளுக்கு துளசி, அருகம்புல், வில்வம் எடுத்து வழங்கினால் கூட போதும். நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருப்பவருக்கு ஒரு ஆறுதல் சொல்ல வேண்டும்.
அனைவரிடத்திலும் தன்னம்பிக்கை தரும் வகையில் பேச வேண்டும். நாம் கூற விளையும் நல்ல வார்த்தைகள் தான் தவம். ஆசை, கோபம் இரண்டும் மனித வாழ்க்கைக்கு நஞ்சாக உள்ளது. இந்து மதம் என்பது துறவறத்தை மேற்கொண்டு உடனே வெளியே வா என சொல்லவில்லை.
அந்தந்த வயதில் இன்ப, துன்பங்களை அனுபவித்து விட்டு வா என அழைக்கிறது. பரம்பொருளை தியானிக்கும் பேரின்பம் மட்டும் தான் நிரந்தரம். இவ்வாறு அவர் பேசினார்.