உள்ளூர் செய்திகள்
கல்லாவி அருகே லாரி மோதி தொழிலாளி பலி
கல்லாவி அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி அருகே மேட்டு சூளகரையை சேர்ந்த தொழிலாளி மதியழகன் (வயது 50). இவர் மொபட்டில் ஓலப்பட்டியில் இருந்து கல்லாவி செல்லும் சாலையில் மேட்டுசூளகரையில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மதியழகன் பலியானார். இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.