உள்ளூர் செய்திகள்
உடல் மீட்கப்படும் காட்சி

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலி 13 ஆக உயர்வு- உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை

Published On 2021-12-08 17:27 IST   |   Update On 2021-12-08 19:40:00 IST
ஊட்டி குன்னூர் இடையே சாலைப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குன்னூர்:

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் உயர் அதிகாரிகள் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தை சந்தித்தது. இதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் பிபின் ராவத் நிலை குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை. 

உயிரிழந்தவர்களின் உடல்கள் டி.என்.ஏ., பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் விபத்து நடந்து பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். 

இதனிடையே  ஊட்டி குன்னூர் இடையே சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News