உள்ளூர் செய்திகள்
டிடிவி தினகரன்

அ.தி.மு.க.வின் பிரச்சனைகளை திசை திருப்பவே போராட்டங்கள் அறிவிப்பு- டி.டி.வி.தினகரன்

Published On 2021-12-08 14:52 IST   |   Update On 2021-12-08 17:30:00 IST
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சை யார் இயக்குகிறார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
திருச்சி:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மதியம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் நிலை குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போன்று உள்ளது. அ.தி.மு.க.விற்குள் நடக்கும் பிரச்சனைகளை திசை திருப்பவே அவர்கள் தி.மு.க.வுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்துள்ளார்கள்.



சசிகலாவிற்கும் எனக்கும் மன வருத்தம் இருக்கிறது என கூறுபவர்கள், துரோகத்தை ராஜ தந்திரம் என கூறியவர்கள் கருத்துக்கு பதில் சொல்ல முடியாது.

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சை யார் இயக்குகிறார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Similar News