உள்ளூர் செய்திகள்
கைது

சோழவரம் அருகே மாமூல் கேட்டு கடை சூறை: 2 வாலிபர்கள் கைது

Published On 2021-12-07 14:31 IST   |   Update On 2021-12-07 14:31:00 IST
சோழவரம் அருகே மாமூல் கேட்டு கடை சூறையாடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

சோழவரம் அடுத்த எடப்பாளையம் திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் கண்ணாராம். இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு வந்த 2 வாலிபர்கள் மாமுல் கேட்டு ரகளையில் ஈடுபட்டனர். கடையில் இருந்தவர்கள் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் திடீரென கடையில் உள்ள பொருட்கள் மற்றும் டியூப் லைட்டை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து கண்ணாராம் சோழவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

இதில் கடையில் மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபட்டது. அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் , முருகன் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News