உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டை நகராட்சி என்ஜினீயர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Published On 2021-12-06 14:12 IST   |   Update On 2021-12-06 14:12:00 IST
ராணிப்பேட்டை நகராட்சி என்ஜினீயர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரது வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் லாலாப்பேட்டையை சேர்ந்தவர் செல்வகுமார். ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது வீட்டிற்கு இன்று காலை திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறை துணைக்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவாக லஞ்ச ஓழிப்பு போலீசார் வந்தனர்.

வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதி மறுத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்து வருகிறது.

செல்வகுமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார்.

அப்போது அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரது வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Similar News