உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
குடியாத்தம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் பகுதியில் சாராயம் விற்பதாக வந்த தொடர் புகார்களின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில், குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலையில் குடியாத்தம் அடுத்த பூங்குளம் சாணாங்குட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக்கொண்டிருந்த பேரணாம்பட்டு சாத்கரா பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 19) என்பவரையும், குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் பகுதியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த நீலகண்டன் (50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.