உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

21 மாணவிகளுக்கு கொரோனா- குன்னூரில் 3 பள்ளிகள் மூடல்

Published On 2021-12-02 10:04 GMT   |   Update On 2021-12-02 10:04 GMT
குன்னூரில் தனியார் விடுதியில் 21 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக 3 பள்ளிகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஊட்டி:

குன்னூரில் உள்ள சி.எம்.எஸ். என்ற தனியார் விடுதியில் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி அருகே உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். விடுதியில் மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 21 மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து விடுதியில் உள்ள சக மாணவிகள் மற்றும் பணியாளர்கள் என 114 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

தொற்று பாதிக்கப்பட்ட 21 மாணவிகள் 3 பள்ளிகளில் படித்து வந்தனர். அதில் புனித மேரீஸ் பள்ளியில் படித்து வந்த 14 மாணவிகளுக்கு கொரோனா பாதித்தது. 3 பள்ளிகளிலும் படித்து வரும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவு ஓரிரு நாட்களில் தெரியவரும். கொரோனா பரவலை தடுக்கவும், தடுப்பு நடவடிக்கையாகவும் குன்னூர் புனித மேரீஸ் பள்ளி, புனித அந்தோணியார் பள்ளி உள்பட 3 பள்ளிகள் நேற்று முதல் மூடப்பட்டு உள்ளது.

3 பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பள்ளி வகுப்பறைகள், வளாகங்களில் நகராட்சி மூலம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News