உள்ளூர் செய்திகள்
சீமான்

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பது ஜனநாயகப் படுகொலை - சீமான் கண்டனம்

Published On 2021-12-02 07:59 GMT   |   Update On 2021-12-02 07:59 GMT
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடவடிக்கைகளில் பங்கேற்க தடைவிதித்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.


பாராளுமன்றத்தில் சட்டங்களை இயற்றும் போதும், அவற்றை திருத்தம் செய்யும்போதும் அதனை எவ்வித விவாதங்களுக்கும், தர்க்கங்களுக்கும் உட்படுத்தாது, மாற்றுக் கருத்துக்கே இடம் அளிக்காத வகையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை முடக்கி, அவர்களது குரல் வளையை நெரிப்பது மிகப்பெரும் ஜனநாயகப் படுகொலையாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி பயணம்

Tags:    

Similar News