உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே ஆட்டோ - வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி

Published On 2021-12-02 13:23 IST   |   Update On 2021-12-02 13:23:00 IST
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் படுகாயமடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம்:

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் குழந்தைராஜ் (வயது 48). இவரது மனைவி செண்பவகவள்ளி (45). இவர்கள் மற்றும் உறவினர் ஆறுமுகம் (70) ஆகியோர் பயணிகள் ஆட்டோவில் கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். ஆட்டோவை அருணாச்சலமுதலியார்(63) என்பவர் ஓட்டினார். 

ஆட்டோ கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரணம்பேட்டை அருகே வந்த போது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் படுகாயமடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சஞ்ஜீத்குமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News