உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டையில் சுகாதார ஆய்வாளர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட சுகாதார ஆய்வாளர்களின் போராட்டத்தை அரசும், துறையும், பரிசீலிக்காமல், கைது நடவடிக்கை செய்ததை கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை:
ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட சுகாதார ஆய்வாளர்களின் போராட்டத்தை அரசும், துறையும், பரிசீலிக்காமல், கைது நடவடிக்கை செய்ததை கண்டித்து, அனைத்து ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சுகாதார அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மோகன மூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட சுகாதார ஆய்வாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கு.பழனி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணராஜ், துணை இயக்குனரின் நேர்முக தொழில்நுட்ப உதவியாளர் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.