உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை

Published On 2021-12-01 13:09 IST   |   Update On 2021-12-01 13:09:00 IST
மழைநீர் மற்றும் கழிவு நீர் இரண்டும் கலந்து நிரம்பி கழிவுநீர் வெளியேறி வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட கல்பனா ரோடு காளியம்மன் கோவில் எதிரில் உள்ள சாக்கடை கால்வாயில் தற்போது மழைநீர் மற்றும் கழிவு நீர் இரண்டும் கலந்து நிரம்பி கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி, தனியார் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் அதிகளவு உள்ளதால் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News