செய்திகள்
குடிநீர் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

திருப்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2021-11-30 15:31 IST   |   Update On 2021-11-30 15:31:00 IST
மழைக்காலங்களில்கூட 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர் பகுதிகளில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளது. இதில் 42 மற்றும் 43 ஆகிய 2  வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் சூழலில், இந்தப் பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை என குற்றம்சாட்டி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிநீர் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

மழைக்காலங்களில்கூட இப்பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப் படுவதாகவும் இதனால் தண்ணீர் வரும் நாட்களில் வேலைக்கு செல்வதை விட்டு விட்டு தண்ணீர் பிடித்து வைக்கும் அவலம் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

குடிநீர் வினியோகத்தை முறைப்படி வழங்க வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

Similar News