செய்திகள்
கோப்புபடம்

தளி பேரூராட்சியில் நாளை மக்களை நாடிடும் நிகழ்ச்சி-அமைச்சர்கள் பங்கேற்பு

Published On 2021-11-29 09:45 GMT   |   Update On 2021-11-29 09:45 GMT
நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.
உடுமலை:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் பொது மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக சாலை வசதி, தெருவிளக்கு வசதி,கழிப்பிட வசதி, பொது சுகாதாரம், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை மற்றும் இதர கோரிக்கை மனுக்களை மக்களை நாடிடும் நிகழ்ச்சியில் அமைச்சர்களிடம் கொடுத்து தீர்வு காண பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தளி பேரூராட்சியில் நாளை 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மக்களை நாடிடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க .பொறுப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெயராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தளி பேரூராட்சியில் நாளை 30-ந்தேதி  மக்களை நாடிடும்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

நாளை காலை 10.30 மணி அளவில் உடுமலை ஊராட்சி ஒன்றியம் தளி மாரியம்மன் கோவில் சமூக நல கூடம் அருகில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News