செய்திகள்
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்

Published On 2021-11-28 22:12 GMT   |   Update On 2021-11-28 22:12 GMT
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி:

பழனி முருகன் கோவிலில், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை பிரதானமாக உள்ளது. இதன் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது.

இந்த ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதையொட்டி அதன் சேவை நிறுத்தப்படும். அதன்படி இன்று (திங்கட்கிழமை) பழனி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அதன் சேவை இன்று நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயிலை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம். மேற்கண்ட தகவல், கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News