செய்திகள்
கோப்புபடம்

பள்ளி விளையாட்டு மைதானங்கள் அளவீடு

Published On 2021-11-27 07:49 GMT   |   Update On 2021-11-27 07:49 GMT
அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களின் வசதிகள், மைதான பரப்பளவுகளின் சரியான அளவீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி விளையாட்டு மைதானங்களின் பரப்பளவுகளையும் பிரத்யேக கூகுள் செயலி மூலமாக அளவீடு செய்து அனுப்புமாறு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

பாட அறிவு தாண்டி, உடல் மற்றும் மனதிற்கு வலிமை சேர்க்கும் விளையாட்டுகளிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. இதற்குரிய மைதானங்கள், வசதிகள் பள்ளிகள் தோறும் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திட, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களின் வசதிகள், மைதான பரப்பளவுகளின் சரியான அளவீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்  ரவீந்திரன் கூறியதாவது:

அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், முதலில் https://play.google.com/store.app/details ?id=com.dewdev.lat.longfinder_full_final எனும் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 

தங்கள் விளையாட்டு மைதானத்தின் மத்தியில் நின்று கொண்டு. அச்செயலிக்குள் நுழைந்து, current location கொடுத்து அதில் வரக்கூடிய Longitude. Latitude Decimal அளவை அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News