செய்திகள்
பள்ளி, கல்லூரி மாணவிகள்

கனமழை எதிரொலி: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2021-11-26 02:44 GMT   |   Update On 2021-11-26 08:52 GMT
தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது 5 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.



மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகாது என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சிவகங்கை, மதுரை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், கன்னியாகுமரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. தமிழகத்தில் இனி வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே தடுப்பூசி முகாம்: மா.சுப்பிரமணியன்
Tags:    

Similar News