செய்திகள்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின்

மழை பாதிப்பு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழுவினர் சந்திப்பு

Published On 2021-11-24 06:02 GMT   |   Update On 2021-11-24 09:51 GMT
மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான குழுவினர் இன்று காலை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
சென்னை:

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலை எங்கும் மழைநீர் தேங்கியது. விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பயிர்கள் அழுகின.



இதையடுத்து, தமிழகத்திற்கு விரைந்த மத்தியக் குழுவினர் இரண்டு பிரிவாக பிரிந்து கடந்த 3 நாட்களாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர், இன்று காலை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வு குறித்து மத்தியக் குழுவினர் முதல்வரிடம் ஆலோசனை நடத்தினர்.


Tags:    

Similar News