செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூரில் செல்போன் பழுது பார்க்கும் இலவச பயிற்சி-27ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-11-22 11:44 GMT   |   Update On 2021-11-22 12:02 GMT
பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பயிற்சி அளிக்கப்படும்.
திருப்பூர்:

திருப்பூர்-அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம் புதூரில் கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் காம்ப்ளக்ஸ் இரண்டாவது மாடியில் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இயங்குகிறது.  

இம்மையத்தில் செல்போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி வருகிற 27-தொடங்குகிறது. வல்லுனர்கள் பங்கேற்று செல்போன் பழுது கண்டுபிடித்தல் மற்றும் சரி செய்வது குறித்து பயிற்சி அளிக்கின்றனர். இப்பயிற்சியில் திருப்பூர் மாவட்ட கிராமப்புற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் மட்டும் பங்கேற்கலாம்.   

பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். 


பயிற்சி நாளில் காலை, மாலை டீ,மதிய உணவு மற்றும் பயிற்சி உபகரணங்கள், சீருடை வழங்கப்படும். பயிற்சியின் ஒரு பகுதியாக தொழில் தொடங்க கடன் பெறுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சி முடிவில் தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசின் ஸ்கில் இந்தியா சான்று வழங்கப்படும்.  

மேலும் விவரங்களுக்கு 99525 18441 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   
Tags:    

Similar News