செய்திகள்
காய்கறிகள்

கொடைக்கானலில் காய்கறி விலை உச்சத்தால் பொதுமக்கள் கலக்கம்

Published On 2021-11-22 11:18 GMT   |   Update On 2021-11-22 11:18 GMT
கொடைக்கானலில் அனைத்து காய்கறிகளும் விலை உச்சத்தில் உள்ளதால் பொதுமக்கள் கலக்கமடைந்து வாங்காமல் திரும்பிச் சென்றனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு மலைக்கிராமங்களில் விளையும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகளும், தரைப்பகுதிகளில் விளையக்கூடிய அவரை, கத்தரி, வெண்டைக்காய், கருணை கிழங்கு, தக்காளி, உள்ளிட்ட காய்கறிகளை வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக காய்கறிகள் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பெரும்பாலான காய்கறிகள் ரூ.100க்கும் அதிகமாக இருந்ததால் சாமானிய மக்கள் அதனை வாங்க இயலாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளான கத்திரிக்காய் கிலோ ரூ.120, வெண்டைக்காய் ரூ.120, பீன்ஸ் ரூ.120, தக்காளி ரூ.110, முருங்கைக்காய் ரூ.120, பாகற்காய் ரூ.120, பட்டர் பீன்ஸ் ரூ.180, சிவப்பு பவளபீன்ஸ் ரூ.180, குடை மிளகாய் ரூ.180, பெங்களூர் தக்காளி ரூ.130 என விற்பனை செய்யப்பட்டது.

இதனால் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் அனைவரும் இந்த திடீர் விலை ஏற்றத்தினால் அவதியடைந்து குறிப்பிட்ட சில காய்கறிகளை சிறிதளவு மட்டும் வாங்கிச் சென்றனர். மேலும் வாரச்சந்தையில் முறையாக விலைப்பட்டியல் வைக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காய்கறிகள் விலை உயர்வுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News