செய்திகள்
கைதான டிரைவர்-கிளீனர், பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

மீன்பெட்டிகளுக்கு அடியில் மறைத்து கடத்த முயன்ற 6 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2021-11-21 07:10 GMT   |   Update On 2021-11-21 07:10 GMT
உவரி அருகே மீன்பெட்டிகளுக்கு அடியில் மறைத்து கடத்த முயன்ற 6 டன் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர், கிளீனரை கைது செய்தனர்.
திசையன்விளை:

உவரி கடலோர பாதுகாப்பு குழும சப்- இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் இன்று அதிகாலை கூடுதாழை விலக்கில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மீன்பெட்டிகளுக்கு அடியில் ஏராளமான ரே‌ஷன் அரிசி பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தலா 50 கிலோ எடை கொண்ட 120 பைகளில் சுமார் 6 டன் எடை கொண்ட ரே‌ஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரியையும், ரே‌ஷன்அரிசி பைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், லாரி டிரைவரான குமரி மாவட்டம் பரக்குன்று பகுதியை சேர்ந்த அஜூ (வயது 41), படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கிளீனர் ரவீந்திரன் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கூடுதாழையை சேர்நத ஒரு பெண்ணிடம் இருந்து வாங்கிய ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கொண்டு சென்றதாகவும் அந்த பெண் ரே‌ஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட ரே‌ஷன் அரிசியை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News