செய்திகள்
குண்டடம் பகுதியில் மழையால் சேதமான சோளப்பயிர்கள்.

குண்டடம் பகுதியில் மழையால் பயிர்கள் சேதம்

Published On 2021-11-19 08:11 GMT   |   Update On 2021-11-19 08:11 GMT
மழையின் காரணமாக மொத்தம் 19 வீடுகள் இடிந்துள்ளன.
குண்டடம்:

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் ஒரே நாளில் 200 மி.மீ., மழை பதிவாகியது, இதன் காரணமாக  சூரியநல்லூர், ஜோதியம்பட்டி பகுதிகளில் சோளம் மற்றும் மக்காச் சோளம் தோட்டங்களில் மழைநீர் புகுந்தது. 

நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,கிட்டத்தட்ட சுமார் 30 ஆண்டுகளாக இப்படியொரு மழையை நாங்கள் பார்த்ததில்லை. மழையால் சோளம், மக்காச்சோளம், தக்காளி மற்றும் வெங்காயம் என 300 முதல் 400 ஏக்கர் நிலங்களில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையின்  காரணமாக மொத்தம் 19 வீடுகள் இடிந்துள்ளன. அங்கு வசித்து வந்த பொதுமக்கள் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News