செய்திகள்
திருப்பூர் அய்யப்பன் கோவிலில் துளசிமாலைகளை வாங்கும் அய்யப்ப பக்தர்கள்.

திருப்பூரில் துளசிமாலைகளை ஆர்வமுடன் வாங்கிய அய்யப்ப பக்தர்கள்

Published On 2021-11-16 10:42 GMT   |   Update On 2021-11-16 10:42 GMT
மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
திருப்பூர்:

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான நாளை கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்களும், மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கமாகும்.

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவதற்காக திருப்பூர் பூஜை பொருட்கள் விற்பனை கடைகளில் துளசி மாலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. அந்த கடைகளில் விரதம் தொடங்கும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.
  
திருப்பூர் அய்யப்பன் கோவிலில் இன்று காலை முதல் விரதம் தொடங்கும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான துளசி மாலைகளை வாங்கி சென்றனர். மேலும் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கோவிலில் தூய்மைப்பணிகள் நடக்கிறது. 
Tags:    

Similar News