செய்திகள்
சுற்றி செல்வதை தவிர்க்க திருப்பூர் சரவணா வீதி பாதையை திறக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சரவணா வீதியில் மழைநீர் வடிகால், தரைப்பாலம் கட்டும் பணி நடந்ததால் அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
திருப்பூர்:
எப்போதும் நெரிசல் நிறைந்து காணப்படும் திருப்பூர் அவிநாசி ரோட்டில் இருந்து பி.என்., ரோட்டுக்கு வரும் வழியாக 60 அடி ரோடு (ராம்நகர் சந்திப்பு) உள்ளது.
இப்பாதையில் அதிகளவில் போக்குவரத்து இருப்பதால் மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் அதற்கு முன்பாக உள்ள சரவணா வீதியை பயன்படுத்தி வந்தன.
அந்த வீதியில் மழைநீர் வடிகால், தரைப்பாலம் கட்டும் பணி நடந்ததால் அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது பணிகள் நடந்து முடிந்து விட்டது.
ஆனால் பாதை திறக்கவில்லை. இதனால் அனைத்து வாகனங்களும் 60 அடி ரோடு சென்று சுற்றி வருவதால் நெரிசல் அதிகமாகிறது. எனவே சரவணா வீதியை திறக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.