செய்திகள்
நல உதவிகளை பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வழங்கிய காட்சி.

மக்களின் நலனில் அக்கறை உள்ள ஒரே இயக்கம் அ.தி.மு.க.,-பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேச்சு

Published On 2021-11-14 14:09 IST   |   Update On 2021-11-14 14:09:00 IST
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வின் 50ம் ஆண்டு பொன் விழா மக்கள் விழாவாக கொண்டாடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி 36 மற்றும் 55 வது வார்டுகளுக்குட்பட்ட சின்னான் நகர், பெரிச்சிபாளையம் அன்னமார் காலனி பகுதிகளில் அ.தி.மு.க. 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு டேபிள் சேர் உள்ளிட்ட நல உதவிகளை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமை தாங்கினார். பகுதி கழக செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, சடையப்பன், கருணாகரன், கட்சி நிர்வாகிகள் தம்பி மனோகரன், ஆண்டவர் பழனிசாமி,  கே.பி.ஜி.மகேஷ்ராம், ராஜகோபால், கந்தவேல்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசுகையில், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வின் 50-ம் ஆண்டு பொன் விழா மக்கள் விழாவாக கொண்டாடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால் தோற்றாலும் மக்கள் நலனில் அக்கறை எடுத்து அவர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக கூறி 6 மாதமாகியும் தி.மு.க. அரசு இதுவரையில் நிறைவேற்றவில்லை. ஆகவே, தமிழகத்தில் விரைவில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அனைவரும் சிந்தித்து அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News