செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் தேசிய நூலக வார விழா-நாளை தொடங்குகிறது

Published On 2021-11-14 07:42 GMT   |   Update On 2021-11-14 07:42 GMT
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி நூலகர் சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நூலக வார விழா குறித்து பேசுகிறார்.
உடுமலை:

உடுமலை உழவர் சந்தை சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் 2 ல் 54-வது தேசிய நூலக வார விழாவையொட்டி நூலக வார விழா மற்றும் பாரதியார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நாளை  15-ந்தேதி காலை 10மணிக்கு தொடங்குகிறது.

நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் இளமுருகு தலைமை  வகிக்கிறார். துணைத் தலைவர் சிவக்குமார் ,பொருளாளர் சிவகுமார் ,வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன், நூலக வாசகர் வட்ட உறுப்பினர் நல்லாசிரியர் விஜயலட்சுமி த,மிழாசிரியர் சின்னராசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி நூலகர் சுப்பிரமணியன்  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நூலக வார விழா குறித்து பேசுகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன் ,பிரம்மோத் அஸ்ரப் சித்திகாமற்றும் நூலக வாசகர் வட்டத்தினர் செய்து வருகின்றனர். நிகழ்ச்சிகளை நூலகர் கணேசன் ஒருங்கிணைக்கிறார்.
Tags:    

Similar News