செய்திகள்
காய்கறிகள்

அரியலூரில் காய்கறிகள் விலை கடும் உயர்வு

Published On 2021-11-12 10:30 GMT   |   Update On 2021-11-12 10:30 GMT
தர்மபுரியில் இருந்து தக்காளி போன்ற காய்கறிகள் வரத்து குறைந்து போனதால் தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு முன்பு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்ட விலையை விட தற்போது கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் அவரைக்காய் ரூ.120, கேரட் ரூ.55, பீன்ஸ் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.50, கத்தரிக்காய் ரூ.50 என இரு மடங்காக விலை உயர்ந்துள்ளது. கிராமப் பகுதியில் இருந்து வரும் உள்ளூர் காய்கறிகள் மழையின் காரணமாக விற்பனைக்கு வரவில்லை.

சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிபிளவர், ஒட்டன்சத்திரம், தர்மபுரியில் இருந்து தக்காளி போன்ற காய்கறிகள் வரத்து குறைந்து போனதால் தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News