செய்திகள்
திருப்பூரில் தொடர் மழையால் சகதிக்காடாக மாறிய சாலைகள் - பொதுமக்கள் கடும் அவதி
பல தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
திருப்பூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மாநகர் மற்றும் மாவட்ட்ததின் பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் சிதலமடைந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறின. காலையில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பல தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே அதனை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல இடங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வு மேற்கொண்டு சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:
திருப்பூர் வடக்கு -5, அவினாசி-3.40,பல்லடம்-6, ஊத்துக்குளி-6, காங்கேயம்-6, மூலனூர்-2, குண்டடம்-30, திருப்பூர் கலெக்டரேட்-5, வெள்ளகோவில் ஆர்.ஐ.. அலுவலகம்-10.20, திருப்பூர் தெற்கு -5, கலெக்டர் கேம்ப் அலுவலகம்-5.50, தாராபுரம்-8.