செய்திகள்
கோப்புபடம்

மத்தள ஆற்றுப்பாலத்தில் மண்சரிவு - அமைச்சர் ஆய்வு

Published On 2021-11-12 07:30 GMT   |   Update On 2021-11-12 07:30 GMT
தளிப்பகுதி மக்களுக்கு சுடுகாடு வசதி இல்லாததால் அதற்கும் இடம் தேர்வு செய்து தருவதாக அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்தார்.
உடுமலை:

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தளி எத்தலப்பநாயக்கர் மணி மண்டப அரங்கம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து முள்ளுபட்டி பகுதியில் மழை வெள்ளத்தால் மத்தள ஆற்றுப்பாலத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை அமைச்சர் பார்வையிட்டார். வீடில்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்க தளி பங்களா மேடு அருகே உள்ள காலி இடத்தையும் தளி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைபெறும் இடம் அருகில் உள்ள காலி இடத்தையும் பார்வையிட்டார்.

தளிப்பகுதி மக்களுக்கு சுடுகாடு வசதி இல்லாததால் அதற்கும் இடம் தேர்வு செய்து தருவதாக அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்தார். வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு விரைவில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். 

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, தளி பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் கீதா, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய ராம கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

மேலும் வடக்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், பேரூர் செயலாளர் உதயகுமார் ,உடுமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் புதிய அரசு, தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் மொடக்குப்பட்டி ரவி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மலர்விழி பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News