செய்திகள்
சாதனை படைத்த மாணவன்.

மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி - குடிமங்கலம் அரசுப்பள்ளி மாணவன் சாதனை

Published On 2021-11-11 14:01 IST   |   Update On 2021-11-11 14:01:00 IST
உடுமலை கல்வி மாவட்ட அளவில் வாய்ப்பாட்டு இசை கருவி, இசை நடனம் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது.
உடுமலை:

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இடைநிலை, மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்பிக்கவும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. 

இப்போட்டியானது தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக கலா உத்சவ் என்ற பெயரில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படுகிறது. 

உடுமலை கல்வி மாவட்ட அளவில் வாய்ப்பாட்டு இசை கருவி, இசை நடனம் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது. இப்போட்டியில் முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 

அதன்படி மாவட்ட அளவிலான போட்டி திருப்பூரில் நடந்தது. அதில் ஓவியப் போட்டியில் பங்கேற்ற குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாஸ்கர் முதலிடம் பெற்றார். அவரை பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி, ஓவிய ஆசிரியர்கள் தியாகராஜன், மாசிலாமணி ஆகியோர் வாழ்த்தினர்.
Tags:    

Similar News