செய்திகள்
கைது

ஆலங்குளம் அருகே ஆடுகள் திருடிய 4 பேர் கைது

Published On 2021-11-10 16:22 IST   |   Update On 2021-11-10 16:22:00 IST
ஆலங்குளம் அருகே ஆடுகளை திருடியது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களின் கூட்டாளிகள் சிலரை தேடி வருகின்றனர்.
ஆலங்குளம்:

ஆலங்குளம் பகுதியில் அடிக்கடி ஆடுகள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. சமீபத்தில் ஆலங்குளத்தை சேர்ந்த ராஜசேகரன், மாறாந்தையை சேர்ந்த சங்கர், காத்தபுரத்தைச் சேர்ந்த அருண் ஆகியோர் தங்கள் ஆடுகளை காணவில்லை என்று ஆலங்குளம் போலீசில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் ஆடுகளை கடத்திச் சென்று வெளியூரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி புதூரை சேர்ந்த மகராஜன் (31), சுப்பு ராஜா (26), கருவநல்லூரை சேர்ந்த வேல்முருகன் (19), கண்டியபேரி சுரேஷ் (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களது கூட்டாளிகள் சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News