செய்திகள்
மழை

பலத்த மழை எச்சரிக்கை- மாமல்லபுரத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை

Published On 2021-11-10 14:56 IST   |   Update On 2021-11-10 14:56:00 IST
மாமல்லபுரம் கடலோர காவல் படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் பைப்பர் படகுகளுடன் மீட்பு பணிகளுக்கு தேவையான கருவிகளுடன் மழை வெள்ளத்தை சமாளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
மாமல்லபுரம்:

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால் வடகடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘ரெட் அலர்ட்’ பகுதில் உள்ள மாமல்லபுரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து கால்வாய் கரையோரங்களில் குடியிருப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அரக்கோணத்தில் இருந்து மாமல்லபுரம் வந்து முகாமிட்டுள்ளனர்.

இரண்டு கமாண்டர் தலையில் 25-க்கும் மேற்பட்ட மீட்புபடை வீரர்கள் வந்துள்னர். அவர்கள், நவீன தொலை தொடர்பு கருவிகள், மரம் மற்றும் இரும்புகளை வேகமாக அறுக்கும் கருவி, நீன்ட நேரம் மின்சாரம் கொடுக்கக்கூடிய பேட்டரிகள், கூடுல் மீட்பு பணிக்கு அவசர வீரர்கள் தேவை என்றால் அரக்கோணத்தில் உள்ள தலைமை அலுவலக ஹெலிகாப்டர் தளத்திற்கு தகவல் கொடுக்க ரேடார் வசதி மற்றும் தற்காலிக முகாம் கூடாரங்களுடன், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாமல்லபுரத்தில் தயாராக உள்ளனர்.

மாமல்லபுரம் கடலோர காவல் படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் பைப்பர் படகுகளுடன் மீட்பு பணிகளுக்கு தேவையான கருவிகளுடன் மழை வெள்ளத்தை சமாளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

மாமல்லபுரத்தில் இன்று காலை கனமழை பெய்து வருகிறது. ஸ்தலசயன பெருமாள் கோவிலில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கிறது.
Tags:    

Similar News