செய்திகள்
மழை

கனமழை எதிரொலி - சேலம், விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Update: 2021-11-10 00:36 GMT
கனமழை எதிரொலியால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
விழுப்புரம்:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை வரை மிதமான மழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். 
Tags:    

Similar News