செய்திகள்
கைது

கெலமங்கலம் அருகே லாட்டரி விற்ற 2 பேர் கைது

Published On 2021-11-09 16:51 IST   |   Update On 2021-11-09 16:51:00 IST
கெலமங்கலம் அருகே லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் கெலமங்கலம் பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கெலமங்கலம் ஜீவா நகரை சேர்ந்த ராஜன் (வயது 32), சவுடேஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மஞ்சுநாத், (34) ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் லாட்டரி சீட்டுகளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News