செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் பள்ளியில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்மநபர்கள் யார்?-போலீசார் தீவிர விசாரணை

Published On 2021-11-08 15:09 IST   |   Update On 2021-11-08 15:09:00 IST
தீபாவளியையொட்டி பள்ளிக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது.இதை சாதகமாக பயன்படுத்தி மரம் வெட்டப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள  ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புங்கை, வாகை, சவுக்கு, சந்தனம், வேம்பு உட்பட ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அங்கு 20 அடி உயரம் வளர்ந்து இருந்த சந்தன மரம் வெட்டப்பட்டு கடத்தி சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தலைமையாசிரியர் ஸ்டெல்லா அளித்த புகாரின்படி  திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 தீபாவளியையொட்டி பள்ளிக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி மரம் வெட்டப்பட்டுள்ளது. மரத்தின் அடிபகுதியில் இருந்து 10 அடி வரை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு 1999ம் ஆண்டு வனத்துறை சார்பில் இந்த மரம் நடப்பட்டது. 22 ஆண்டு பழமையான மரத்தை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News